தொழில் மாநகராம் சிவகாசி நகரில் நற் செயலாற்றி வரும் இந்து நாடார்கள் செண்பகக்குட்டி வகையறா தாயாதிகள் சங்க உறுப்பினர்கள் கூடிய ஓர் இனிய பொழுதில் "கல்வித் தொண்டு புரிவதும் இறைபணியே" என்ற கருத்தினை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு சங்கத்தின் கீழ் பள்ளி ஒன்று துவங்க முடிவு செய்தனர். "ஒன்றே செய்க! நன்றே செய்க! அதுவும் இன்றே செய்க" என்ற கருத்தின் வழி நின்று, முடிவு செய்யப்பட்ட உடனேயே அதாவது நல்நாளாம் சித்திரை திங்கள் 10 ம் தேதி 22.04.1996அன்று பள்ளிக் கட்டிட வாஸ்து செய்யப்பட்டது.
செண்பகக்குட்டி வகையறா தாயாதிகள் சங்கத்திற்குப் சொந்தமான கோவில் திருக்குளத்தினை அடுத்துள்ள நிலத்தில் பள்ளிக் கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கல்வியாண்டு 1996ல் ஜூன் திங்கள் இரண்டாம் நாள் "ஸ்ரீ செண்பக விநாயகர் மெட்ரிக்குலேஷன் பள்ளி" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்திற்கு சொந்தமான விடுதியின் இரு அறைகள் பள்ளிக் கூடத்திற்கென ஒதுக்கித் தரப்பட்டன. ஓர் ஆசிரியையும் இரண்டு குழந்தைகளுமாக நமது பள்ளி தனது முதல் அடியை எடுத்து வைத்தது.
நல்ல திருவுள்ளங்களாகிய 1. A.S.K. ரத்தினசாமி நாடார், தூத்துக்குடி 2. A.P.R.S.P.P. செண்பகமூர்த்தி , திருமதி S. பொன்னுலட்சுமி, செல்வி S. கற்பகக்கனி என்ற ஆதிபராசக்தி, 3. A.P.R.S.P.P. பால்ராஜன், திருமதி. P. பிரேமா, திருமதி. S. அனிதா தீபலட்சுமி ஆகியோரது நன்கொடையால் பள்ளிக் கட்டிடம் வளர ஆரம்பித்தது
1998 ம் ஆண்டு சங்கத் தலைவர் திரு.A.P.R.S.P.P. பால்ராஜன் அவர்கள் தலைமையில் திருமதி.பிரேமா பால்ராஜன் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து முதல் கட்டமாகக் கட்டிய முதல் நான்கு அறைகளும் ஓர் அலுவலக அறையும் திறந்து வைக்கப் பட்டன.
இரண்டாம் கட்டமாக பள்ளிக்கு இரு வகுப்பறைகளும் ஓர் படிக்கட்டு அறையும் கட்ட சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. பள்ளியின் கட்டிட செலவுக்கு நிதியுதவி அளித்த பெருஉள்ளங்கள் 1. M.முத்துராஜ், M.மாஸ்கோ மணி - தேனி, T.S.R.பிரபாகரன், இளமதி Chennai, தெய்வத்திரு.2. K.P.A.T. தர்மராஜ் நாடார் ரோஜாப்பூத்தாய் நினைவாக T.D.ராஜேந்திரன், முருகேஸ்வரி, R.அபிராமி, J.ரமேஷ் பாபு, அமுதா, சிந்து, Dr.J.தங்கத்திருப்பதி, M. கிரிராஜகுமாரி, A.முரளி. 2002ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று அன்றைய சங்கத் தலைவர் திரு A.C.மாதவன் அவர்களது தலைமையில் திருமதி.ராஜஸ்ரீ மாதவன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
மூன்றாம் கட்டமாக பள்ளிக்கு மேலும் இரு வகுப்பறைகளும் ஒர் சிறிய படிக்கட்டு அறையும் கட்ட முடிவானது. பள்ளி வளர உதவிய நல் உள்ளங்கள் 1.AGSAR PAINTS தூத்துக்குடி, 2. S.L.N.திருமணசேகரன் தமயந்தி அம்மாள் - மதுரை, 3. A.S.S.J.கண்ணன், K.வெண்ணிலா - தேனி, 4. S.ராஜாமணி நாடார் & சன்ஸ் - கோயம்புத்தூர்.
பள்ளியின் புதிய கட்டிடம் 10.03.2003 ம் அன்று திருN.A. பரமகுரு ராஜா நெல்லையப்பன் அவர்கள் தலைமையில் திருமதி. பூர்ணிமா ரவீந்திரன் - டெக்கான் கன்ஸ்ட்ரக்சன்ஸ் திருநெல்வேலி & மதுரை அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.
நான்காவது கட்டமாக பள்ளிக்கு மேலும் நான்கு அறைகளும், மேலும் ஒர் அலுவலக அறையும் கட்ட முடிவெடுக்கப்பட்டது. பள்ளிக் கட்டிடம் வளர உதவிய நல் உள்ளங்கள் 1.T.S.K அண்ணாமலை நாடார், தங்கதுரைச்சி அம்மாள், K.A.. செண்பகராஜன், உமாவதி, முருகவேல்,கலாரதி, A.பாஸ்கரன், கலைமணி, A.அசோகன் மகேஸ்வரி A.ராஜசேகரன், சுப்புலட்சுமி, A.காளீஸ்வரன், அழகு மீனாட்சி - பாண்டிச்சேரி.
2.A.S.K.T..ஐனார்த்தனன், J.வைடூரியம் - சிவகாசி, 3. ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் - சிவகாசி, 4.அய்யன் பயர் ஒர்க்ஸ், 5. A.P.R.N. ஆறுமுகசாமி நாடார் நினைவாக, A.ஞானசெளந்தரி அம்மாள், N.A. தியாகராஜன், T.திவமதி N.A.நெல்சன், N.ரஜீலா N.A.செல்வராஜன், S.பத்மினி N.A. அனந்தராஜன், A.பீனாஆனந்த்.
பள்ளிக் கட்டிடம் 22.5.2005 அன்று சங்கத் தலைவர் திரு.A.P.R.S.P.A.கிரகதுரை அவர்கள் தலைமையில் திருமதி பவானி கிரகதுரை அவர்களால் குத்து விளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.
நமது பள்ளி 2004 ஆம் ஆண்டு, முதன் முதலில் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட பள்ளியாக செயல்பட்டு வந்தது. பின்பு 18-04-2006 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியாக (451/84/2005) செயல்பட்டு வருகிறது.
நமது பள்ளி மெட்ரிக்குலேஷன் பள்ளிப் பாடத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. Kindergarten குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாடங்கள், விளையாட்டு முறையில் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. "கல்வியை சுமையாக ஏற்றாமல் சுவையாக அளிக்க வேண்டும்" என்ற கருத்தை ஆழமாக மனதில் கொண்து கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக ஹிந்தியும் மூன்றாம் வகுப்பு முதல் கணினியும் பாடப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. நமது பள்ளியின் கல்வித் திட்டமானது இன்றைய தேவையை உணர்ந்து, பல் முகத் திறனோடு கூடிய மாணவ மாணவியரை உருவாக்க முற்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறப்பு மிக்க ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கல்வி கற்பதில், நமது பள்ளி சிறந்து விளங்கியதால் Pre KG வகுப்பிலிருந்து இரண்டாவது பிரிவு துவங்கப்பட்டது. அதற்காக கூடுதலாக 5 வகுப்பறைகளும் ஒரு Store Room கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகளுக்கு திரு KAKA.A.S. ராஜப்பன் மற்றும் திரு.A.S.சின்னா நாடார், அணில் திரு. P.செண்பக மூர்த்தி, அணில் திரு P.சிவபிரான், அணில் திரு P. கிருஷ்ணமூர்த்தி, திரு.A.S. கருணாகரன் மற்றும் திரு P.S.R.S. ராமசாமி ஆகியோர் நன்கொடை அளித்துள்ளார்கள்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்காக Cycle Shed கட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் சுகாதாரம் பேணுவதற்கு கழிப்பறைகள் மேம்படுத்தப்பட்டது. மாணவர்களுக்காக கூடுதல் கழிவறை கட்டப்பட்து. பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்காக ஒளித்திரையில் கல்வி கற்பிக்க அனைத்து வகுப்பிற்கும் Smart Board / Flat Panel வாங்கப்பட்டன.
கூடுதலாக திறக்கப்பட்ட பிரிவிற்கு புதிதாக 11 வகுப்பறை மற்றும் ஒரு கணினி அறை கட்டப்பட்டது. அதற்கு திரு. E.A.E.T.S ஜனகராஜன் - திருமதி J. சாந்தி. திரு.E.A.E.T.S. செண்பகராஜன் - திருமதி S. ஸ்ரீதேவி, திரு.P.S.R. செண்பகமூர்த்தி - திருமதி S. சரஸ்வதி திரு. P.S.R. சென்ன கேசவன் - திருமதி S. கமலம் நினைவாக திரு.P.S.R.S. மாதவன், திரு.A.N. நடராஜ நாடார் - திருமதி N.தேனம்மாள் நினைவாக அவர்கள் குடும்பத்தார்கள், திரு. E.V.S. வெள்ளையப்ப நாடார் - திருமதி V. கார்திகையாயினி நினைவாக அவர்கள் குடும்பத்தார்கள், திரு. N.P.S.S.N. சசிந்தரன் திருமதி S. ராஜலட்சுமி, திரு. N.P.S.S.N.வத்சலன் - திருமதி v. ரஷிதா அவர்கள் சார்பாக அவர்கள் குடும்பத்தார்கள், தேனி M.M. முத்துராஜ் - திருமதி மாஸ்கோ மணி நினைவாக அவர்கள் குடும்பத்தார்கள், பொள்ளாச்சி மற்றும் கோவை திரு.செண்பகமூர்த்தி - திருமதி மாலதி S. திரு. திருப்பதி மூர்த்தி - திருமதி T. ஜெயலெட்சுமி, தேனி Dr.M.பாபு ராகவன் நினைவாக திருமதி B. ஞானசெளந்தரி திரு. B. செந்தில்நாதன் திருமதி S.மதுமிதா, திரு. P.S.R.S.மாதவன் - திருமதி M. சுமதி ஆகியோரின் கருணை உள்ளத்தால் கட்டப்பட்டன.
புதிதாக கட்டிய கணினி அறைக்கு 32 கணினிகள் வாங்கப்பட்டன. சிறிய வகுப்பிலிருந்து மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அறிவுத்திறன் மற்றும் உடல்திறனை மேம்படுத்த பல விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டன. கூடைப்பந்து விளையாடும court ஆனது மேம்படுத்தப்பட்டது. பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் அலுவலக அறைகள் மெருகேற்றப்பட்டன. பள்ளிக்கு புதிதாக ஒரு கலையரங்கம் மற்றும் நூலகம் கட்டப்பட்டது.
மேலும் கேரம், செஸ், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ் நடனம் போன்றவற்றிற்கும் சிறப்பு மிக்க ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் திறம்பட கற்று திறமைகளை நிரூபித்தும் வருகிறார்கள்.
நமது பள்ளியின் தலையாய குறிக்கோளான "ஒவ்வொரு மாணவ / மாணவியரையும் முழுமனிதனாக உருவாக்குவதே பள்ளியின் கடமை" என்ற கருத்தின் வழி நின்று முழுமனிதன் என்பவன் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்க நெறிகளிலும் தலை சிறந்து விளங்குபவனே என்று உணர்ந்து செயல்பட்டு வருகிறது
நம் பள்ளி அத்தகைய மனிதனை உருவாக்குவதே தன் லட்சியமாக கொண்டு நமது பள்ளி மென்மேலும் உயர்ந்து இச்சமுதாயத்திற்கு ஏற்ற முழுத் தகுதியுடைய மக்களை உருவாக்க "என் கடமை பணி செய்து கிடப்பதே" என தன் கடமையை தவறாது செய்து வருகிறது. வரும் ஆண்டுகளில் காலத்திற்க்கேற்ப மாறிவரும் கணினி புரட்சியால் நமது பள்ளியானது தன் முழுமையை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .