முன் 109 - 110 ஆம் பக்கங்களிற் கூறியவாறு, மல்லி நாட்டில் ஒரு திருநகராகத் திகழும் சிவகாசி, மேற்கில் சிவகிரி சேத்தூர், கொல்லங்கொண்டான், பேரையூர் முதலிய பாளையப்பட்டுக்களாலும், கிழக்கில் கோவார்பட்டி, கொல்லபட்டி, ஒண்டிப்புலிநாயக்கனூர் முதலிய பாளையப் - பட்டுக்களாலும் நெருக்குண்டு நிர்ப்பந்தமுடையதாக இருந்தது. அந்நகரில் தெப்பக்குளத்தை அமைத்த செண்பகக் குட்டி நாடன் மரபில் அய்ய நாடன் என்பவன் மிக்க செல் வாக்கு உடையவனாக வசித்திருந்தான். மதுரைக் துரைத்தனத்தாருக்கு இப்பக்கங்களி லுள்ள குடிகளிடம் வரிவசூல் செய்து கொடுக்கும் பொறுப்பும் இவனது குடும்பத்துலிருந்து வந்தது. மதுரை, மகமதியரது ஆட்சியிலிருந்த பொழுது, நவாபு ஒருவன், வரிப்பணம வந்து சேராமையால் அய்ய நாடனது தந்தையை மதுரைக்குக் கொண்டுபோய்ப்ச் சிறையி லடைத்துவிட்டான். அய்ய நாடன், உடனே மதுரையை யடைந்து, சமயம் பார்த்து நவாபுவைப் பேட்டி கண்டு, தன் சொற்சாதுர்யத்தால் அவனை மகிழ்வித்து அவனாற்கொடுக்கப்பெற்ற தண்டிகையும், குதிரையும் பெற்று நூறு பொருநர் புடைசூழ விருதுகளுடன் சிவகாசிக்குத் திரும்பி வந்து வரிப்பணங்களை ஒழுங்காய் வசூல்செய்து அனுப்பி வந்தான். நவாபின் நன்மதிப்புடையவனாகை-யால், பானையப்பட்டுகளுக்கு அஞ்சா நெஞ்சினனாக ஆடம்பரமாக அவன் வாழ்ந்திருந்தான். சிவகாசி நாட்டண்மைக் காரரது குடும்பமும் இத்தகைய பெருமதிப்பு உடையதோர் குடும்பமேயாம்.